டெல்லி அமைச்சருக்கு பறந்த நோட்டீஸ்! - ஏப்.8-க்குள்...தேர்தல் ஆணையம் போட்ட உத்தரவு

x

"ஆம் ஆத்மி கட்சி" தலைவர்கள் பா.ஜ.க.-வில் இணையாவிட்டால் கைது செய்யப்படுவார்கள் என டெல்லி அமைச்சர் அதிஷி கூறியதற்கு, விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பா.ஜ.க.வில் இணைய தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்காததால், தாம் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் 4 மூத்த தலைவர்கள் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும், பா.ஜ.க. சார்பில் தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அதிஷி குற்றஞ்சாட்டியிருந்தார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் அவரின் கருத்துக்கு ஏப்ரல் 8-ஆம் தேதி மதியம் 12-க்குள் அதிஷி விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்