இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை - கொந்தளித்த பாஜக எம்.பிக்கள் - பிரதமர் சொன்ன பதில்

x

பட்டியலின பழங்குடியினருக்கான கிரீமி லேயர் முறையை அமல்படுத்தக் கூடாது என பட்டியலின பழங்குடியின சமூக பாஜக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு அருந்ததியர் சமூகப் பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு வழங்க இயற்றியுள்ள சட்டமும் செல்லுபடி ஆகும் என்ம் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஏழு நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வில் சில நீதிபதிகள், எஸ்சி பிரிவினருக்கும் கிரீமி லேயர் என்னும் வருமான வரம்பை அளவுகோலாகக் கொள்ளும் ஒரு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தினர். முதல் தலைமுறையின் இடஒதுக்கீட்டில்

முன்னேறி விட்டால் அவர்களுக்கு மீண்டும் இடஒதுக்கீட்டுச் சலுகை வழங்கக் கூடாது என்றும் கருத்தும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் இன்று பட்டியலென மற்றும் பழங்குடியின சமூகத்தை பாஜக எம்பிகள் பிரதமர் மோடியை சந்தித்து இது குறித்து மனு அளித்தனர். பட்டியலின பழங்குடியினத்தவருக்கான கிரீமி லேயர் குறித்து குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களை ஒருபோதும் நடைமுறைப்படுத்த கூடாது என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பிரதமர் மோடி இது குறித்து தான் பரிசீலிப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்.

---------


Next Story

மேலும் செய்திகள்