"மத நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.." தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் அறிவுரை

x

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் முருகன் ஹேஸ்டேக்கில் பதிவிட்டுள்ள அவர், மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை என்று குறிப்பிட்டுள்ளார். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது என்றும் அறிவுரை கூறியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் துடிப்பதாக குறிப்பிட்டுள்ள பாலகிருஷ்ணன், கோயில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே அவர்களின் நோக்கம் என்று குற்றம் சாட்டியுள்ளார். இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது என்றும், மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்