ஊழல் வழக்கு.. மாஜி அமைச்சருக்கு இன்று சிறை தண்டனை ரத்தாகுமா?
முன்னாள் அமைச்சர் செல்வகணபதி மீதான சுடுகாட்டு கூரை ஊழல் மேல்முறையீட்டு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
vovt
1991 முதல் 1996 வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில், 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்த T.M.செல்வகணபதி, தமிழகம் முழுவதும் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டத்தில், 23 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து செல்வகணபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீடு வழக்குகளில் இன்று காலை நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளிக்க உள்ளார்.
Next Story