கலவரமாக மாறிய மாநகராட்சி கூட்டம்-ஈர் எதிர் துருவங்களாய் சண்டையிட்டு கொண்ட திமுக அதிமுக கவுன்சிலர்கள்
மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற
சேலம் மாநகராட்சியின் அவசரக்கூட்டத்தில் எதிர்க்கட்சித்தலைவர் யாதவமூர்த்தி எழுந்து பேச துவங்கினார். திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் வார்டு அலுவலகம் கட்டவிடாமல் தடுப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர் யாதவமூர்த்தியை, திமுக கவுன்சிலர்கள் சுற்றி நின்று கொண்டு மைக்கை பிடுங்கி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுக கவுன்சிலரை அடிக்கும் தொணியில் திமுக கவுன்சிலர்கள் பேசியதால் பரபரப்பாக மாறியது.இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் மேயர் இருக்கை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story