எதிர்கட்சிகள் போராட்டம் செய்வதை தடுக்க முயற்சி -காங். மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ்

x

எதிர்கட்சிகள் போராட்டம் செய்வதை தடுக்க முயற்சி -காங். மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ்

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜி, மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கர் சிலைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது குறித்து, காங்கிரஸின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் நேற்று மதியம் எக்ஸ் தளத்தில் பதிவு இட்டிருந்தார். இதைப் பற்றி நாடாளுமன்ற செயலகம் வெளியிட்டுள்ள விளக்கம் பொய்யான தகவல்களை கொண்டிருப்பதாக இன்று பதிவு செய்துள்ளார். இடமாற்றம் பற்றி எதிர்க்கட்சிகளுடன் எந்த விவாதமும் செய்யப்படவில்லை என்றும், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் செய்வதை தடுக்கவே இவை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

-


Next Story

மேலும் செய்திகள்