காங். நிர்வாகி மர்ம மரணம்.. - மனைவி, மகனிடம் துருவி துருவி விசாரணை..
நெல்லை கரைச்சுத்துப் புதூரை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக குடும்ப உறுப்பினர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நெல்லை கரைச்சுத்துப் புதூர் காங்கிரஸ் நிர்வாகி
கே பி கே ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தொடர்பாக நெல்லை தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்ட சி பி சி ஐ டி போலீசார் விசாரணை செய்து வந்தனர். ஜெயக்குமார் எழுதிய கடிதங்களை கைப்பற்றி, புது புது கோணங்களில் விசாரணை நடத்திய அவர்கள், விஞ்ஞானப்பூர்வமாகவும் தடயங்களைத் தேடி ஆய்வும் செய்தனர். இந்நிலையில் கரைச்சுத்துப்புதூர் கேபிகே ஜெயக்குமாரின் இல்லத்திற்கு சென்ற கோவை சிபிசிஐடி போலீசார் இரவு ஏழு முப்பது மணி வரை மனைவி மற்றும் மகன்களிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். ஜெயக்குமார் மரணம் அடைந்து 70 நாட்கள் ஆன நிலையில் வழக்குகிடப்பில் போடப்பட்டு விட்டதாக பேச்சு எழுந்த நிலையில், கோவை சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை நடத்துவதால் வழக்கு சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.