பைக் ஓட்டிய செல்வப்பெருந்தகைக்கு சிக்கல் - ஏன் இப்படி செய்தார்?

x

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மீது பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவில் மத்திய அரசு நலத்திட்ட பிரிவின் மாநில செயலாளராக இருந்து வரும் எம்.சி. மருதுபாண்டியன் என்பவர் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 23ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்ற செல்வபெருந்தகை, பைக் பேரணியில் பங்கேற்றதாக கூறியுள்ளார். அப்போது, செல்வபெருந்தகையும், அவருடன் பைக் ஓட்டி வந்தவர்களும் தலைக்கவசம் அணியவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். செல்வபெருந்தகை மற்றும் அவருடன் சென்ற அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்