"காமராசர் என்ன தவறு செய்துவிட்டார்,ஏன் இப்படி கிடக்கிறது".. கொந்தளித்த செல்வப்பெருந்தகை

x

சென்னையில் காமராஜர் நினைவிடம் இடுகாடு போன்று இருப்பது வேதனை அளிக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காமராசர் நினைவிடத்தை பார்வையிட்ட பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, காமராசர் நினைவிடம் பராமரிப்பின்றி கிடப்பதாக பலரும் வேதனை தெரிவித்ததால், தற்போது பார்வையிட்டதாகக் கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலிலிதா நினைவிடம் அளவிற்கேனும் இதையும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் பராமரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். காமராசர் என்ன தவறு செய்துவிட்டார், அவரது நினைவிடம் ஏன் இப்படி கிடக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்