"காங்கிரசுக்கு அருகில் கூட பாஜக இல்லை" - கடுமையாக விமர்ச்சித்த ராகுல்காந்தி
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த இந்திய பொருளாதாரத்தில் வேகத் தடையாக பிரதமர் மோடி வந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்... 2011லேயே உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்ததாகக் குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடி தமக்கு வேண்டப்பட்ட ஒரு சில நண்பர்களின் ஆதாயத்திற்காக நாட்டையே வெறுமையாக்கி கொண்டிருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், பொருளாதாரத்தில் காங்கிரசுக்கு அருகில் கூட பாஜக அரசு எப்போதும் இல்லை எனவும் ராகுல் காந்தி சாடியுள்ளார்...
Next Story