காங். கொடுத்த மனு - அக். 30 தேதிக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்

x

சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அக்பர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நவம்பர் 7 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெறுகிறது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி கவார்தா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா, அக்பர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாகவும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், அசாம் முதல்வரிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், இல்லாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்