"திட்டமிடல், தொலைநோக்கு இவர்களுக்கு இல்லை" - கொந்தளித்த பிரதமர் மோடி | Congress

x

நகர்ப்புற வளர்ச்சியில் திட்டமிடல் மற்றும் தொலைநோக்கு ஆகிய இரண்டும் கடந்த காலங்களில் நம் நாட்டில் இல்லை என பிரதமர் மோடி மறைமுகமாக காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், 11 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர், இந்தியா நவீனமாக இருக்க வேண்டும் என்றும் இந்தியா நவீன மயமாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்தியா தமது பாரம்பரியத்தை பெருமையுடன் சுமந்து முன்னேற வேண்டும் என குறிப்பிட்ட அவர், துரஷ்டவசமாக, கடந்த காலங்களில், நகர்ப்புற வளர்ச்சியில் திட்டமிடல் மற்றும் தொலைநோக்கு இரண்டும் நம் நாட்டில் இல்லை என தெரிவித்தார். பள்ளிகளில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால், பள்ளிகள் நிறுவப்பட்ட பின்னரும் பெண்களுக்கான பள்ளிகளின் கதவுகள் மூடப்பட்டதாகவும், பெண்கள் வளர்ந்தவுடன், அவர்கள் பள்ளியை விட்டு வெளியேற வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார். சுதந்திரத்துக்கு முன், நாட்டில் நிலவிய சமூகச் சூழல், வறுமை, பாகுபாடு போன்ற காரணங்களால், நம் மகள்களுக்குக் கல்வி மிகவும் கடினமாக இருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். பழைய அரசாங்கங்களின் பழைய மனநிலையையும், பழைய அமைப்புகளை மாற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்