இளைஞரை தாக்கிய காங். கவுன்சிலர் கணவர் - எல்.முருகன் போட்ட பதிவு

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இளைஞரை தாக்கிய காங்கிரஸ் கவுன்சிலரின் கணவரை கைது செய்ய வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மேட்டுப்பாளையத்தில் தூய்மை பணி மேற்கொள்ளாமல் இருப்பது பற்றி புகார் தெரிவித்த இளைஞரை காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா மற்றும் அவருடைய கணவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள அவர், இதுபோன்ற நபர்களிடம் இருந்து மக்கள் பணியை எப்படி எதிர்பார்க்க முடியும் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார். சம்பந்தப்பட்ட கவுன்சிலர் மற்றும் அவருடைய கணவர் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்