"நானே நேரடியாக..." கோவையில் அண்ணாமலை கொடுத்த உறுதி
கோவை துடியலூர் அருகே நடைபெற்ற தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பயன்களை இச்சங்கத்திற்கும் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இச்சங்கத்தின் முக்கிய கோரிக்கையான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்காக மத்திய நிதி அமைச்சரிடம் தாமே நேரடியாக
பேசி ஏற்பாடு செய்வதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
Next Story