Red Zone ஆக மாறிய கோவை... `இன்ச் பை இன்ச்..' - உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் மேற்குமண்டலம்
நாளை மாலை 5.35 மணிக்கு கர்நாடக மாநிலம் சிவ்மோகா விமான நிலையத்திலிருந்து ராணுவ விமானத்தின் மூலம் கோவை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடி, அங்கிருந்து வாகன பேரணி துவங்கவுள்ள மேட்டுப்பாளையம் சாலை கங்கா மருத்துவமனை அருகே 5.45 மணிக்கு சாலை மார்க்கமாக வருகிறார்...
மாலை 5.45 மணி முதல் 6.45 வரை வாகன பேரணியில் மக்களை அவர் சந்திக்கவுள்ள நிலையில், 6.50 மணிக்கு ஆர்.எஸ்.புரம் தபால் தந்தி அலுவலகம் முன்பாக பேரணி நிறைவடைகிறது.
6.50 மணிக்கு சர்கியூட் ஹவுஸ் கிளம்பும் பிரதமர் மோடி இரவு அங்கு தங்குகிறார். மேற்கு மண்டலத்தில் இருந்து திரளாக பா.ஜ.க.வினர் இந்த வாகன பேரணியில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிகழ்வை முன்னிட்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
கோவையில் இரவு ஓய்வு எடுத்த பின்னர் அடுத்த நாள் காலை 9.30 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறார் பிரதமர் மோடி.
பாலக்காட்டில் நிகழ்வுகளை முடித்துக் கொண்டு பிற்பகல் 12.50 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் சேலம் செல்கிறார். பின்னர் 1 மணி அளவில் சேலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் அவர் 2.25 மணிக்கு சேலம் விமான நிலையத்திலிருந்து ராணுவ விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.