முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு | Cm Stalin

x

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு | Cm Stalin

டெல்டா விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக சுமார் 78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், 2000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் வழங்கப்படும் என்றும், நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ.4 ஆயிரம் வீதம், 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு ரூ.40 கோடி நிதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயறு வகைப் பயிர்களை 10,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்தவதற்கு, 50 சதவீத மானியத்தில் தரமான விதைகள், சூடோமோனாஸ், திரவ உயிர் உரங்கள் வழங்கப்படும் என்றும், குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கிடவும் உத்தரவிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்