பாஜக பொதுக்கூட்டம் முடிந்ததும் தலைதெறிக்க ஓட்டம்.. பின்னாலே சென்று ரவுண்ட்அப் செய்த போலீஸ்
சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் முடிந்த போது மேடையில் பின்பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வேகமாக ஓடினார். அவரை பாதுகாப்பு பணியில்
இருந்த காவல்துறையினர் விரட்டி பிடித்தனர். மது போதையில் இருந்த அந்த நபர் செங்கல்பட்டு மாவட்டம் அயோத்தி குப்பத்தை சேர்ந்த பரணிதரன் என்பது தெரியவந்தது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மகனை பார்க்க வந்திருப்பதாகவும் அந்த நபர் தெரிவித்தார். இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
Next Story