சந்திர பிரியங்காவின் அமைச்சர் பதவி.. "இந்த நபருக்கு..?" கசிந்த முக்கிய தகவல்
புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் அமைச்சர் நியமனம் மற்றும் நீக்கம் குறித்து குடியரசுத்தலைவர் தான் ஒப்புதல் வழங்கவேண்டும். இது யூனியன் பிரதேச சட்டவிதி என்பதால், சந்திரபிரியங்காவின் அமைச்சர் பதவி நீக்கம் குறித்து துணைநிலை ஆளுநர் அனுப்பிய கோப்பை பெற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளித்து அதை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று குடியரசுத்தலைவர், அமைச்சரின் பதவியை நீக்கி உத்தரவிட்டுள்ளார். காரைக்காலை சேர்ந்த சந்திர பிரியங்காவிடம் இருந்து பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி காரைக்காலைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த சட்டமன்ற உறுப்பினர் பிஆர்என்- திருமுருகனுக்கு வழங்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே போல் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.
Next Story