முன்னாள் மாஜி அமைச்சர் மீது சிபிஐ விசாரணை.. துணை நிலை ஆளுநர் அதிரடி
டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனா அனுமதி அளித்துள்ளார்.
சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் 2018-2021 காலகட்டத்தில், 10 கோடி ரூபாய் மிரட்டி பணம் கேட்டு பெற்றதாக, டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், திகார் சிறை காவல் தலைமை இயக்குனர் சந்தீப் கோயல், திகார் சிறை காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் ஆகியோர் மீது புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமாரை விசாரிக்க துணைநிலை ஆளுநர் ஏற்கனவே அனுமதி வழங்கிய நிலையில், முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனா அனுமதி அளித்துள்ளார். பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சத்யேந்திர ஜெயின், மருத்துவ சிகிச்சைக்காக தற்போது ஜாமினில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.