மத்தியில் கூட்டணி ஆட்சியால் நடந்த மாற்றம்.. சற்று குறைந்த ``முக்கியவத்துவம்'

x

மறுசீரமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பில், பாஜக கூட்டணி கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள் உட்பட 15 மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர்.2014ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு மறு சீரமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். நிதி ஆயோக்கின் தலைவராக பிரதமர் மோடியும், துணைத் தலைவராக பொருளாதார நிபுனர் சுமன் கே பெர்ரியும் தொடர்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு நேர உறுப்பினர்களாக உள்ள 4 பேரிலும் மாற்றம் இல்லை. அதே நேரத்தில், உத்தியோகப்பூர்வ உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று, சிறப்பு அழைப்பாளர்களாக, ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக மத்திய அமைச்சர்களும், குமாரசாமி, ராம்மோகன் நாயுடு, சிராக் பாஸ்வான் உள்ளிட்ட பாஜக கூட்டணியை சேர்ந்த மத்திய அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்