மத்திய அரசுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்ற அறிவிப்பு.. நிம்மதி பெருமூச்சு விடும் மாநில அரசுகள்

x

மாநிலங்களில் எடுக்கப்படும் கனிம வளங்கள் மீது வரிவிதிக்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. மத்திய அரசு மற்றும் சுரங்க ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனங்களிடம் இருந்து 2005 ஏப்ரல் முன் தேதியிட்டு ராய்ல்டி மற்றும் வரியை தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் 2026 ஏப்ரல் தொடங்கி 12 தவணையாக வசூலித்துக்கொள்ளவும் மாநிலங்களை உச்சநீதிமன்றம் அனுமதித்தது. இப்போது 2005 முதல் மத்திய அரசு வசூலித்த ராய்ல்டி மற்றும் வரியை திரும்ப பெறுவது தொடர்பாக மாநில அரசுக்களின் மனுக்களை விசாரிக்க அமர்வு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்