காவிரி விவகாரம் - EPS பரபரப்பு பேட்டி | Kaveri River | EPS
தமிழக முதல்வர் ஸ்டாலின் நிபந்தனை விதித்திருந்தால், கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்திருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக நடத்திய சட்டப்போராட்டத்தின் விளைவாக, காவிரியில் தண்ணீர் பெறும் உரிமையை உச்சநீதிமன்றத்தால் பெற்று, ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி நிர்வாக மசோதாவுக்கு ஆதரவு அளித்தால்தான் கூட்டணி என்று நிபந்தனை விதித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன் மாநில உரிமைக்காக கூட்டணியில் இடம்பெற்றார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே அடிப்படையில், கர்நாடக காங்கிரஸ் காவிரியில் உரிய பங்கு நீரை வழங்கினால்தான் பெங்களூரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று முதல்வர் ஸ்டாலின் நிபந்தனை வித்திருக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்திருந்தால், காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்திருக்கும் என்றும் அந்த அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.