10% இல் இருந்து 0% ஆக குறைப்பு.. எல்லோரும் எதிர்பார்த்ததை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்

x

டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று புற்றுநோய் மருந்துகள் மீதான 10 சதவீத சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக, பட்ஜெட் உரையின் போது நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்தியாவில் 27 லட்சம் புற்றுநோயாளிகள் இருப்பதைக்

கருத்தில் கொண்டு, இதற்கான கோரிக்கையை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதி அமைச்சகத்துக்கு அனுப்பியிருந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மருந்துகளும் மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் பித்தநீர் பாதை புற்றுநோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. எக்ஸ்ரே குழாய்கள், பிளாட் பேனல் டிடெக்டர்களுக்கான சுங்க வரிகளும் குறைக்கப்பட்டுள்ளதால், எக்ஸ்ரே இயந்திரத் தொழிலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்

என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய சுகாதார இயக்கத்திற்கான நிதி ஒதுக்கீடு 36 ஆயிரம் கோடி ரூபாயாக 4 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்