BREAKING || யோசிப்பதற்குள் உச்சநீதிமன்றம் சென்ற ஈபிஎஸ் - ஓபிஎஸ்-க்கு ஷாக் நியூஸ்

x

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது தரப்பை கருத்தையும் கேட்காமல் எவ்வித உத்தரவை பிறப்பிக்க கூடாது என தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்..

கடந்த ஆண்டு ஜூலை 11ல் நடத்தப்பட்ட அதிமுக பொது குழு நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஒ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து மார்ச் 28ஆம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு உத்தரவிட்டிருந்தார்.

அவரது தீர்ப்பில், பொது குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால், 2,460 பொது குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என தெளிவுபடுத்தி இருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் உள்ளிட்டோர் உடனடியாக மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை முடியாது எனவும், அவ்வாறு தடை விதித்தால், அது தீர்மானங்களை செல்லாது என அறிவிக்க கோரிய பிரதான வழக்கில் நிவாரணம் வழங்கியதாகி விடும் எனக் கூறி, தீர்மானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பளித்ததது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்