பாஜகவை விமர்சனம் செய்த ஆர்.எஸ்.எஸ்... - புயலை கிளப்பிய பரபரப்பு கட்டுரை

x

மக்களவை தேர்தல் தொடர்பான பாரதிய ஜனதா கட்சியின்

செயல்பாடுகள் பற்றி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விமர்சனம்

செய்துள்ளது.

பாஜகவின் தாய் நிறுவனம் என்று கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்

அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைஸர் இதழில்,

பாஜகவை விமர்சனம் செய்து கட்டுரை வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜகவின் பின்னடவைவிற்கு

அதன் தலைவர்களின் மித மிஞ்சிய தன்னம்பிக்கை தான்

காரணம் என்று இதில் கூறப்பட்டுள்ளது. 400 இடங்களை

வெல்வோம் என்று பாஜக கூறியிருந்ததை சுட்டுக் காட்டி,

இந்த இலக்கை எட்ட கடும் உழைப்பு தேவை என்று

கூறியுள்ளது. போஸ்டர்களையும், செல்பிகளையும் சமூக

ஊடகங்களில் பகிர்வதால் இதை அடைய முடியாது

என்று விமர்சனம் செய்துள்ளது. நீண்ட வருடம் கட்சியில்

உழைத்தவர்களுக்கு பதிலாக, இதர கட்சிகளில் இருந்து

பாஜகவிற்கு தாவியவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு

கொடுக்கப்பட்டுள்ளது, பாஜகவிற்கு பின்னடைவை

ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது. மகராஷ்ட்ராவில்

சிவசேனா, NCP கட்சிகளை உடைத்து, ஆட்சி அமைத்த

முறையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மக்களவை தேர்தல் தொடர்பான பாரதிய ஜனதா கட்சியின்

செயல்பாடுகள் பற்றி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விமர்சனம்

செய்துள்ளது.

பாஜகவின் தாய் நிறுவனம் என்று கருதப்படும் ஆர்.எஸ்.எஸ்

அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைஸர் இதழில்,

பாஜகவை விமர்சனம் செய்து கட்டுரை வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலில் பாஜகவின் பின்னடவைவிற்கு

அதன் தலைவர்களின் மித மிஞ்சிய தன்னம்பிக்கை தான்

காரணம் என்று இதில் கூறப்பட்டுள்ளது. 400 இடங்களை

வெல்வோம் என்று பாஜக கூறியிருந்ததை சுட்டுக் காட்டி,

இந்த இலக்கை எட்ட கடும் உழைப்பு தேவை என்று

கூறியுள்ளது. போஸ்டர்களையும், செல்பிகளையும் சமூக

ஊடகங்களில் பகிர்வதால் இதை அடைய முடியாது

என்று விமர்சனம் செய்துள்ளது. நீண்ட வருடம் கட்சியில்

உழைத்தவர்களுக்கு பதிலாக, இதர கட்சிகளில் இருந்து

பாஜகவிற்கு தாவியவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு

கொடுக்கப்பட்டுள்ளது, பாஜகவிற்கு பின்னடைவை

ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளது. மகராஷ்ட்ராவில்

சிவசேனா, NCP கட்சிகளை உடைத்து, ஆட்சி அமைத்த

முறையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்