அண்ணாமலை வெளியிட்ட திடீர் அறிக்கை | Annamalai | BJP
நாகை மாவட்ட தலைமை மருத்துவமனையை, ஒரத்தூர் மருத்துவ கல்லூரிக்கு மாற்றியிருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே இருந்த அனைத்து விதமான மருத்துவ சேவைகளும், தரமான கட்டமைப்புடன் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவதாக தெரிவித்துள்ளார். ஒரத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பொதுமக்கள் செல்ல போதிய பேருந்து , சாலை வசதிகள் இல்லை என்று கூறப்படுவதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
Next Story