"ஜூன் 4க்கு பிறகு... ஆம் ஆத்மி அரசு கலைப்பு... CM பகவந்த் தூக்கப்படுவார்.." - கெஜ்ரிவால் பகீர்

x

பஞ்சாபில், பாஜகவுக்கு ஆதரவாக ஒரு வாக்குக் கூட விழக்கூடாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசமாக பேசியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் வரும் ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள டவுன் ஹாலில் ஆம் ஆத்மி கட்சியினரை ஆதரித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பஞ்சாபில் பிரச்சாரம் மேற்கொண்ட அமித்ஷா, ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு பஞ்சாப் மாநில அரசு அகற்றப்பட்டு, முதல்வர் பதவியில் இருந்து பக்வந்த் மான் நீக்கப்படுவார் என மிரட்டல் விடுத்திருப்பதாக குற்றம் சாட்டியதோடு, மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை பாஜக நிறுத்த நினைப்பதாக குறிப்பிட்டார். எனவே பாஜகவிற்கு ஆதரவாக ஒரு வாக்கு கூட விழக்கூடாது என கூறிய அவர், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகவே அனைத்து வாக்குகளும் விழ வேண்டும் எனவும் கூறினார். மேலும் பஞ்சாபுக்கு கிடைக்க வேண்டிய 9 ஆயிரம் கோடி நிதி பாஜகவால் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்