``இந்த ஆண்டு இறுதிக்குள்..'' முக்கிய தலைகளை வைத்து மாஸ்டர் பிளான்..! - நங்கூரத்தை இறக்கிய பாஜக

x

இவ்வாண்டு இறுதிக்குள் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் 4 மாநிலங்களுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.

vovt

மகாராஷ்டிரா, அரியானா, ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் வரவிருக்கும் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஏமாற்றம் அளித்த இந்த மாநிலங்களில் வெற்றியை வசமாக்க அக்கட்சி தீவிரம் காட்டுகிறது. பெரிய மாநிலமான மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மத்திய அமைச்சர் பூபேந்திர் யாதவ், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தேர்தல் பொறுப்பாளர்களாக பா.ஜ.க. நியமித்துள்ளது. அரியானாவுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பிப்லப் குமார் தேவ் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஷர்மா பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு கிஷண் ரெட்டியை தேர்தல் பொறுப்பாளராக பா.ஜ.க. நியமித்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்