பாஜகவில் கூட்டணியில் என்ட்ரி கொடுக்கும் பாமக? - எதிர்பாரா டுவிஸ்ட்...

x

பா.ஜ.க. மற்றும் பா.ம.க. இடையே கூட்டணி முடிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.பா.ம.க. எந்த அணியில் இடம் பெறும் என்று நீண்ட நாட்களாக கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள பாமக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாசும், பாமக தலைவர் அன்புமணி ராமதாசும், தைலாபுரம் தோட்டத்தில் விவாதித்து முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாஜக உடன் கூட்டணி தொடர்பாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும், அதில், எட்டு இடங்கள் வட தமிழகத்திலும், 2 இடங்கள் தென் தமிழகத்திலும் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்