"பாஜக எம்எல்ஏ முதல்வர் பதவி ரூ.2,500 கோடி என்கிறார்" - ராகுல்காந்தி எம்பி தாக்கு
"பாஜக எம்எல்ஏ முதல்வர் பதவி ரூ.2,500 கோடி என்கிறார்" - ராகுல்காந்தி எம்பி தாக்கு
நாட்டிலேயே கர்நாடக அரசில்தான் அதிகமாக ஊழல் மலிந்துள்ளது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹரியூரில் இந்திய ஒற்றுமை பாதயாத்திரைக்கு மத்தியில் பேசிய ராகுல் காந்தி பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
நாட்டிலேயே கர்நாடக அரசில்தான் அதிகமாக ஊழல் மலிந்துள்ளது என குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, முதல்வர் பதவியை 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு வாங்கலாம் என பாஜக எம்.எல்.ஏவே சொல்கிறார் என்றார்.
மாநிலத்தில் உதவி ஆய்வாளர் பதவி 80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது என குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், பொறியியல் பணியிடங்கள் என அனைத்தையும் பாஜக அரசு விற்கிறது என விமர்சனம் செய்தார்.
மாநிலத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 40 % கமிஷன் எடுக்கிறார்கள் என்றும் 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் 40% கமிஷன் கொடுத்துள்ளன எனவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார்.