"பாஜக தயார்" - அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
ஆசிரியர்கள் கோரிக்கை மறுக்கப்பட்டால், ஆசிரியர்களை ஒன்று திரட்டி வெகுவிரைவில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க பாஜக தயாராக இருக்கிறது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று கடந்த 2 சட்டமன்றத் தேர்தல்களிலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இல்லாவிட்டால், ஆசிரியர்களை ஒன்று திரட்டி வெகுவிரைவில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க பாஜக தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story