"வெறுப்பு அரசியல் செய்து வரும் மதவாத கட்சி பாஜக"... செல்வப்பெருந்தகை அதிரடி பேச்சு

x

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டில், வெறுப்பு அரசியல் செய்து வரும் மதவாத கட்சியான பா.ஜ.க. பாதயாத்திரை என்ற பெயரில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தப் போகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என்று, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பா.ஜ.க. நடத்தவுள்ள பாதயாத்திரை விவகாரத்தில், தமிழ்நாடு காவல்துறை மற்றும் உளவுத்துறை மிகவும் எச்சரிக்கையாகயும், விழிப்புடணும் செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நாட்டில் ஏழ்மையை போக்குவேன் வாய்ப்பு தாருங்கள் என்று பிரதமர் மோடி ராமநாதபுரத்தில் பேசினாரே, அவர் அதை நிறைவேற்றி விட்டாரா என்று, தமிழ்நாட்டு மக்களிடம் அண்ணாமலை பேசுவாரா? என்று, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்