பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது

x

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக போரட்டத்தில் ஈடுபட்ட பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்... மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே காவல்துறையினர் அனுமதியையும் மீறி பாஜகவினர் போராட்டம் நடத்த முயன்றனர்... அப்போது பாஜகவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது... போராட்டக்காரர்களைக் கைது செய்ய முற்பட்ட போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது... பாஜகவினரை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர்... பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்