"9 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்திருக்கிறது பாஜக" - மக்களவையில் அனல் பறந்த விவாதம் | Lok Sabha

x

மத்தியில் 9 ஆண்டுகால பாஜக ஆட்சியில், 9 மாநிலங்களில் ஆட்சியை தான் கலைத்திருக்கிறது என தேசியவாத காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தின் போது பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, மணிப்பூர் முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார். 9 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பாஜக, 9 மாநிலங்களில் ஆட்சியை தான் கலைத்திருக்கிறது எனவும் சாடினார். சமாஜ்வாடி எம்.பி.யும், அகிலேஷ் யாதவ் மனைவியுமான டிம்பிள் யாதவ் பேசிய போது, நிர்வாக, நிதி கூட்டாட்சியை பா.ஜ.க. அழித்து வருகிறது எனக் குற்றம் சாட்டினார். அமலாக்கப்பிரிவு, தேர்தல் ஆணையம், சி.பி.ஐ. என அனைத்து தன்னாட்சி அமைப்புகளையும் சிதைக்கும் பாஜக, அவைகளை மக்களை துன்புறுத்தும் ஆயுதமாக மாற்றியிருக்கிறது எனவும் குற்றம் சாட்டினார். மணிப்பூர் சம்பவம் வெட்கப்பட செய்திருக்கிறது என்ற டிம்பிள் யாதவ், இது அரசால் நடத்தப்பட்ட இன வன்முறை என்றும் கடுமையாக விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்