பாஜகவுக்கு வாக்களித்த 6 காங். MLA-க்கள் பதவி பறிப்பு.. உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்வி

x

ஹிமாச்சல் பிரதேச மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 அதிருப்தி எம்எல்ஏக்களின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் மார்ச் 18ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. தகுதி நீக்கத்தை எதிர்த்து ஆறு பேரும் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, உயர்நீதிமன்றத்தை ஏன் நாடவில்லை என நீதிபதிகள் கேட்டபோது, தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுக்கள் மீதான விசாரணையை மார்ச் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்