சபாநாயகர் பதவி? - இந்தியா கூட்டணிக்கு வந்த புதிய சிக்கல்

x

சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ள சூழலில், சபாநாயகர் தேர்தல் நடைபெறுவது எப்படி என்பதை காணலாம்...

நாடாளுமன்றத்தில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகராக இரு உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என அரசியலமைப்பு பிரிவு 93 கூறுகிறது. சபாநாயகர் தேர்தல் குடியரசுத் தலைவர் நிர்ணயித்த தேதியில் நடைபெறும். மக்களவை எம்.பி.க்கள் வாக்களிக்க தனி மெஜாரிட்டி அடிப்படையில் நாடாளுமன்ற சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். அதாவது சபாநாயகர் தேர்தலில் வாக்களிக்கும் உறுப்பினர்களில், அதிகமான வாக்குகளை பெறுபவர் தேர்தல் வெற்றிப்பெற்றவராக அறிவிக்கப்படுவார். எதிர்க்கட்சிகள் கோரிக்கை அடிப்படையில் வாக்குச்சீட்டா? எம்.பி.க்கள் கை உயர்த்துவதா...? என்பது தேர்வு செய்யப்படலாம். சுதந்திர இந்தியாவில் அனைத்து சபாநாயகர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்போது முதல் முறையாக தேர்தல் நடைபெற விருக்கிறது. கடந்த 2 தேர்தல்களில் மெஜாரிட்டியை பெற்ற பாஜக எளிதாக சபாநாயகர் பதவியை பெற்றுவிட்டது. இப்போது அவையில் பாஜக கூட்டணிக்கு 293 எம்.பி.க்கள் ஆதரவும், இந்தியா கூட்டணிக்கு 234 எம்.பி.க்கள் ஆதரவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்