ஆட்சியைப் பிடித்த பாஜக - சத்தீஸ்கர் முதல்வர் யார்? | Chhattisgarh | BJP

x

சத்தீஸ்கர் முதல்வரைத் தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக 54 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்த நிலையில், முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் தாமதம் நீடித்து வருகிறது. இந்நிலையில், முதல்வரைத் தேர்தெடுக்க வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. கட்சிக்குள் கோஷ்டி பூசல் ஏற்படாமல் இருக்க பாஜக இந்த வார தொடக்கத்தில் மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, சர்பானந்தா சோனோவால் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் துஷ்யந்த் கவுதம் ஆகிய மூவரையும் பார்வையாளர்களாக நியமித்தது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 54 எம்எல்ஏக்கள் 3 பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று ராய்ப்பூரில் ஒன்று கூடவுள்ளனர். எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பாஜகவின் சத்தீஸ்கர் பொறுப்பாளர் ஓம் மாத்தூர், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் மாநில இணை பொறுப்பாளர் நிதின் நபி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்