``உச்சகட்ட கோபம்... வேண்டாம்... மீண்டும் அதை செய்ய வச்சுராதீங்க..'' - அண்ணாமலை வார்னிங்

x

ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கைகளை, பொங்கல் வரை இழுத்தடிக்காமல் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு வழங்காமல் நிறுத்தி வைத்து 102 மாதங்களாக, அலைக்கழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். பல ஆண்டுகள் சேவை செய்து ஓய்வு பெற்றவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நிதி ஒதுக்காமல், கார் பந்தயம் போன்ற அனாவசிய செலவுகளுக்கு பெருமளவில் நிதி ஒதுக்கிக் கொண்டிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். ஓய்வூதியத்தை முறைப்படுத்தி, அகவிலைப்படி உயர்வு, 18 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் ஓய்வுக்கால பணப்பலன் ஆகியவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பொங்கல் பண்டிகை வரை இழுத்தடித்து, மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் சூழலுக்குப் போக்குவரத்து ஊழியர்களைத் தள்ள வேண்டாம் என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்