பெண் மண்டை உடைப்பு... அமரை தட்டி தூக்க சல்லடை போடும் போலீஸ்... மும்பை விரைந்த தனிப்படை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியைப் பிடிக்க மும்பைக்கு தனிப்படை விரைந்துள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் தேவி.... இவரது தங்கை ஆண்டாள்... பாஜகவில் மாவட்ட துணைத் தலைவியாகப் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடியின் வருகையின்போது ஆட்களை அழைத்து வருவது தொடர்பாக இவருக்கும் பாஜகவைச் சேர்ந்த நிவேதா என்பவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 21ம் தேதி பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர், நிவேதா உள்ளிட்டோர், தேவி மற்றும் அவரது தங்கை ஆண்டாளைச் சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயம் அடைந்த தேவி அளித்த புகாரின் அடிப்படையில் அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதியப்பட்டது.
இதனடிப்படையில், கார் ஓட்டுநர் ஸ்ரீதரை போலீசார் கைது செய்தனர். அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க கோட்டூர்புரம் ஆய்வாளர் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.