பெண்ணை தாக்கி மண்டையை உடைத்த அமர்பிரசாத் - அதிரடியாக போலீஸ் போட்ட ஸ்கெட்ச்

x

சென்னை கோட்டூர்புரம் பாரதி அவன்யூவை சேர்ந்த தேவி மற்றும் அவரது சகோதரியும் பாஜக நிர்வாகியுமான ஆண்டாள் ஆகியோர் மீது கடந்த 21-ம் தேதி வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக தேவி அளித்த புகாரின் கீழ், பாஜக நிர்வாகி அமர்பிர்சாத், அவரது ஓட்டுநர் உட்பட 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. அமர்பிரசாத்தின் ஓட்டுநர் ஸ்ரீதரை போலீசார் கைது செய்த நிலையில், அமர்பிரசாத்தை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமர்பிரசாத் ஆந்திரா தப்பியதாக தகவல் வெளியானதால், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்