ஈபிஎஸ் இல்லத்துக்கு சத்தமின்றி வந்து சென்ற பாஜக புள்ளி.. திடீர் அரசியல் நகர்வால் பரபரப்பு

x

பாஜகவில் அரசியல் பயணத்தை தொடங்கிய வா.மைத்ரேயன் 2002-ல் அதிமுகவில் இணைந்தார். அவரை ஜெயலலிதா மாநிலங்களவை எம்.பி. ஆக்கினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலில் ஓபிஎஸ் அணியில் இருந்தவர் பின்னர் இபிஎஸ் அணியில் இருந்தார். அப்போது ஓபிஎஸ்-யை சந்தித்ததால், 2022 அக்டோபரில் கட்சி கொள்கை விரோத செயல்களில் ஈடுபட்டதாக மைத்ரேயனை ஈபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கினார். இதனையடுத்து பாஜகவில் இணைந்த மைத்ரேயன், அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இப்போது திடீரென கிரீன்வேஸ் சாலையில் அதிமுகவில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை மைத்ரேயன் சந்தித்து பேசியுள்ளார். இந்த நகர்வு அரசியல் அரங்கில் உற்று நோக்கப்படும் வேளையில், சந்திப்பு குறித்து கேட்ட போது, மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு என்று கூறி பேச்சை மைத்ரேயன் நிறுத்திக் கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்