I.N.D.I.A கூட்டணி.."எனக்கு இதில் விருப்பம் இல்லை"பீகார் CM திட்டவட்டம்
இந்தியக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருக்க தனக்கு விருப்பமில்லை என, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணியை கட்டமைக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தியா கூட்டணியின் 2வது மாநாடு பெங்களூருவில் நடைபெற்ற நிலையில், உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. இதனிடையே, மும்பையில் நடைபெறவுள்ள இக்கூட்டணியின் கூட்டத்தில், நிதீஷ் குமாருக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு உட்பட எதிலும் தமக்கு விருப்பமில்லை எனவும், வேறு யாரேனும் ஒருவர் அந்த பொறுப்பை ஏற்பார்கள் என்றும் குறிப்பிட்டார். அனைவரையும் ஒருங்கிணைக்கவே தான் விரும்புவதாகவும் நிதிஷ்குமார் தெரிவித்தார்.