எச்சரிக்கை கொடுத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா
பெங்களூரு கண்டிரவா மைதானத்தில் நடைபெற்ற கர்நாடகா உதய தின விழாவில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர், நாட்டிலேயே மத்திய அரசுக்கு அதிக வருவாய் கொடுக்கும் மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா இருப்பதாகக் கூறினார். கொடுக்கும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு கூட மத்திய அரசிடம் இருந்து திரும்பி வருவதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். கன்னட மொழி குறித்து அவதூறு பரப்புவோரை அரசு கடுமையாக தண்டிக்கும் என்றும் அவர் எச்சரித்தார். கர்நாடகா உதய தினம் மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்றும், கல்யாண கர்நாடக மாவட்டங்களை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்றும் போராட்டங்களும் நடைபெற்றன.
Next Story