"பிரதமர் மோடியின் அரசியல் வாரிசு" - கொந்தளிக்கும் கெஜ்ரிவால்

x

ஜூன் 4ம் தேதி பிரதமர் மோடி ஆட்சியை விட்டு செல்லப்போவது உறுதி என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் காணொளி வாயிலாக பேசிய அவர், இந்தியா கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவித்தார். மேலும் டெல்லி பிரசாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்களை பாகிஸ்தானியர்கள் என பேசியதை சுட்டிக்காட்டி பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மிக்கு வாக்களித்த டெல்லி, பஞ்சாப், கோவா, குஜராத் மாநில மக்கள் அனைவரும் பாகிஸ்தானியர்களா ? என கேள்வி எழுப்பினார். அத்துடன் பிரதமர் மோடி தனக்கு பிறகு தனது வாரிசாக அமித்ஷாவை தேர்ந்தெடுத்து இருப்பதாக கூறிய அவர், இதன் காரணமாக பெருமையும், ஆணவமும் கொண்டு அமித்ஷா டெல்லி மக்களை வசைபாடுவதாக குற்றஞ்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்