கோர்ட்டில் வைத்தே கெஜ்ரிவால் கைது...யாரும் எதிர்பாரா CBI-யின் ஷாக் என்ட்ரியால் அதிரும் டெல்லி

x

கோர்ட்டில் வைத்தே கெஜ்ரிவால் கைது

யாரும் எதிர்பாரா CBI-யின் ஷாக் என்ட்ரி

மறுபக்கம் திறந்த கதவையும் மூடிய ED

சுற்றி சுற்றி அடிக்கும் துயரம்

கைது... ஜாமின்.... மீண்டும் கைது.. என சென்று கொண்டிருக்கிறது டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நிலைமை... என்ன தான் நடக்கிறது.. பார்க்கலாம் விரிவாக...

சிறையில் உள்ள தங்கள் முதல்வருக்கு ஜாமின் கிடைத்து விட்டது... இனி வழக்கம்போல் டெல்லியில் நாம் ஆதிக்கம் செலுத்துவோம் என உற்சாகம் கொண்டிருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள்.... அடுத்த சில நாட்களிலேயே இந்த உற்சாகம் பறிபோகும் என் கனவிலும் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார்கள்..

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை நீதிமன்றம் கடந்த 20 ம் தேதி ஜாமின் வழங்கியது...

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் ஜாமின் கிடைத்து விட்டது.... என்ற பூரிப்பில் இருந்த கெஜ்ரிவாலுக்கு, அடுத்த நடந்தது அவரே எதிர்பாக்காத ஒன்று.

ஆம்.. விரைவாக செயல்பட்ட அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தின் கதவுகளைத் அடுத்தடுத்து தட்டி... கெஜ்ரிவாலுக்கு திறக்கப்பட்ட கதவை இறுதியாக அடைத்தது...

அமலாக்கத்துறை நடவடிக்கையால் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை நிறுத்தி வைத்தது....

மேலும் ஜாமின் வழங்கிய கீழமை நீதிமன்றத்தின் உத்தரவு குறித்தும் கடுமையான விமர்சனங்களையும் முன் வைத்தது.

இதனிடையே டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பதிவு செய்த வழக்கை வேகமாக தூசி தட்டியது சிபிஐ.

இதன் பின்.. சிறையிலிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலிடம் வழக்கு தொடர்பான ஸ்டேட்மெண்டையும் அதே வேகத்தில் அதிகாரிகள் பெற்றனர்.

தொடர்ந்து... டெல்லி முதல்வரை இந்த வழக்கில் முறைப்படி கைது செய்வதாக விசாரணை நீதிமன்றத்தில் வைத்து சிபிஐ தெரிவித்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்று !.

அடுத்ததாக கெஜ்ரிவாலை போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என்று மனு தாக்கலும் செய்தனர்.....நீதிமன்ற விசாரணையின் முடிவில்.... மூன்று நாள் அனுமதியும் வழங்கப்பட்டது...

இந்நிலையில், புதிய மதுபான கொள்கை வகுத்ததில் முறைகேடு ஏற்பட்டதாக கடந்த 2022 ல் தொடுக்கப்பட்ட வழக்கு, ஆண்டுகள் கடந்தும் சற்றும் பரபரப்பு தணியாமல் டெல்லி அரசியலை தொடர்ந்து தகிக்கச் செய்து வருவது... ஆம் ஆத்மி கட்சியின் எதிர்காலத்திற்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்