விருப்ப தேதியை சொல்லாத அதிஷி.. நாள் குறித்த ஆளுநர்.. வெளியான முக்கிய தகவல்

x

செப்டம்பர் 21ம் தேதி, டெல்லியின் புதிய முதல்வராக, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அதிஷி பதவியேற்கிறார். முன்னதாக, முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பேரில், துணைநிலை ஆளுரர் அலுவலகத்திற்கு அதிஷி அனுப்பிய கடிதத்தில், பதவியேற்பு நாளுக்கான விருப்ப தேதி குறிப்பிடாமல் இருந்தது. இந்நிலையில், பதவியேற்பதற்காக வரும் 21-ஆம் தேதியை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார். அதன்பின்னர், 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு சட்டசபை கூட்டத்தில் அதிஷி உரையாற்றுகிறார்...


Next Story

மேலும் செய்திகள்