பாஜகவினர் கைது..! - "ஆளுநருக்கு பறக்க போகும் ரிப்போர்ட்" - `நட்டா'வின் நால்வர் குழு அதிரடி

x

தமிழக அரசால், பாஜகவினர் எதிர்கொண்டு வரும் தாக்குதல் தொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நியமித்த 4 பேர் கொண்ட குழு, சென்னை வந்தடைந்தது. இதன் தலைவரும், முன்னாள் கர்நாடக மாநில முதல்வருமான சதானந்தா கவுடா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், கேரளா, மேற்குவங்கம் போல் தமிழகம் மாறிவருகிறது என தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பாஜகவினரிடம் மிக ஆழமாக விசாரணை மேற்கொள்ள உள்ளோம் என்றும், அந்த விசாரணை அறிக்கையை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அளிக்க உள்ளோம் என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்