கெஜ்ரிவாலுக்கு ஷாக் கொடுத்த சுப்ரீம் கோர்ட்டு | Arvind Kejriwal | Delhi Liquor Scam
மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதே வழக்கில் சிபிஐயும் கெஜ்ரிவால் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தது. இதற்கு எதிராக கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் சென்றபோது சிபிஐ கைது சட்டவிரோதமாகாது என்றது. இதற்கு எதிராகவும், இடைக்கால ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், சிபிஐ வழக்கிலும் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கெஜ்ரிவால் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். அதனை ஏற்க மறுத்து நீதிபதிகள், சிபிஐயின் கருத்தை கேட்டறியமால் இடைக்கால ஜாமீன் வழங்க முடியாது என்றதுடன் மனுவுக்கு பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவிட்டதோடு, விசாரணையை ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக உத்தரவிட்டனர்.