"நாடு முழுவதும் மதுவிலக்கு கொண்டு வந்தால் தமிழகத்தின் நிலைப்பாடு.." - சபாநாயகர் அப்பாவு பளீச் பதில்

x

இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வந்தால் தமிழகம் அதற்கு தடையாக இருக்காது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தின் கீழ், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 4வது மண்டல மைய திறப்பு விழா நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு இதனை திறந்து வைத்து உபகரணங்களை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவிலக்கு என்பது ஒரு கட்சியின் கொள்கை... மாநாடு நடத்துவதில் தவறில்லை என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்