சபாநாயகர் அப்பாவு மீது தாக்கல் செய்த வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சபாநாயகர் அப்பாவு மீது தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யும் படி, எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 40 அதிமுக எம்.எல்.ஏக்கள் திமுகவில் இணைய இருந்தாதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் அதனை ஏற்க மறுத்து விட்டதாகவும் அப்பாவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகக் கூறி அப்பாவு மீது, அக்கட்சி வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் வழக்கு தாக்கல் செய்தார். இந்த விசாரணையின் போது, எதிர்மனுதாரருக்கு சம்மன் அனுப்பும் வகையில் வழக்கின் ஆதார, ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டுமென மனுதாரருக்கு உத்தரவிட்டு, விசாரணை செப்டம்பர் 9-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Next Story